< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராட குவிந்த பக்தர்கள்..!
|14 Aug 2022 4:22 PM IST
ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.
விடுமுறை நாளின் 2-வது நாளான இன்று ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து ரதவீதி சாலையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.