< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
18 Jun 2023 1:29 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சமயபுரம் வந்தனர். அவர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர்.இதைத்தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அம்மனை தரிசனம் செய்யும் வகையில் அவர்களை, கோவில் இணை ஆணையர் கல்யாணி அறிவுறுத்தலின்படி கோவில் காவலர்கள், பணியாளர்கள் சக்கர நாற்காலியில் அமர வைத்து தனியாக அழைத்து சென்று அம்மனை வழிபட செய்தனர்.

மேலும் செய்திகள்