< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
3 Oct 2023 1:59 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் நேற்று என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சமயபுரம் வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்கள் வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். கோவில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் கோவில் கண்காணிப்பாளர்கள் காளியப்பன், ஸ்டாலின்குமார், அஞ்சுகம் மற்றும் பணியாளர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்