< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

தினத்தந்தி
|
19 Jun 2023 12:15 AM IST

வார விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்:

வார விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் குவிந்த பக்தர்கள்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் வார விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பூஜைகள்

கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலையில் உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தது.

மேலும் செய்திகள்