திருவள்ளூர்
கிருத்திகை தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
|கிருத்திகை தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் நடக்கும் கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மூலவரை வழிப்படுவர். இந்நிலையில் நேற்று கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், அலகு குத்தியும் மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
அதிகளவு பக்தர்கள் திரண்டதால் பொது வழியில், மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரமும், சிறப்பு தரிசன கட்டணத்தில் ஒரு மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகபெருமானை வழிப்பட்ட னர்.