< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
|8 Aug 2022 12:52 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக, நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வந்தனர். அவர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதேபோல் உப்பிலியபுரத்தை அடுத்த புளியஞ்சோலையில் உள்ள மாசி பெரியண்ணசாமி, காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் கிடா வெட்டி, முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.