< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

ராமேசுவரம்,

தொடர் விடுமுறை

தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 4 நாட்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். புனித நீராடிய பக்தர்கள் இலவச தரிசன பாதை மற்றும் விரைவு தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்தனர். ஏராளமான வாகனங்கள் வந்ததால் திட்டக்குடி சந்திப்பு சாலை முதல் சீதாதீர்த்தம் சாலை வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்தபடியே அனைத்து வாகனங்களும் சென்றன.

இதே போல் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

மேலும் செய்திகள்