< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
|17 July 2022 10:24 AM IST
ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ராமேசுவரம்,
இந்திய புனித தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு ஆடி மற்றும் தை அமாவாசை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் ஆடி மாத பிறப்பு மற்றும் விடுமுறை நாளான இன்று ராமேசுவரம் கோவிலில் சாமியை தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் புனித நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.