< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனிக்கு காவடியோடு படையெடுக்கும் பக்தர்கள் - தடபுடலாக தயாராகும் 15 டன் பஞ்சாமிர்தம்
|12 Feb 2023 9:22 PM IST
பழனி முருகன் கோவிலில் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளதால் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
திண்டுக்கல்,
பழனி முருகன் கோவிலில் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளதால் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு எடப்பாடியில் இருந்து காவடி எடுத்து கொண்டு பாத யாத்திரையாக 50 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்காக 15 டன் அளவிலான பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 12 டன் வாழைப்பழம், 300 முட்டைகள், நாட்டுச்சக்கரை, பேரிச்சம்பழம், நெய், தேன், ஏலக்காய் கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.