< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

தினத்தந்தி
|
14 Aug 2023 1:15 AM IST

வாரவிடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி ஆகிய கோவில்களில் பக்தர்கள் திரண்டனர். இவர்கள் பழனி பாதவிநாயகர் கோவிலில் வழிபட்ட பிறகு படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.

இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் வழியாகவும் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சென்றனர். இதற்காக அந்த நிலையங்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ரோப்கார், மின்இழுைவ ரெயிலில் பக்தர்கள் சென்றனர். பொது, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். பழனியில் நேற்று கடும் வெயில் சுட்டெரித்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சுமார் 1½ மணி நேர காத்திருப்புக்கு பின்னரே பக்தர்கள் முருக பெருமானை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்