< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

4 மணிக்கே திறக்கப்பட்ட நடை - சிதம்பரத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
1 Jan 2023 11:45 AM IST

புத்தாண்டை முன்னிட்டு சிதம்பரத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்,

உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று வரும் பக்தர்கள் வருகிற வழியில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் வருகை தந்து செல்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளை தரிசனம் செய்து புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்