< Back
மாநில செய்திகள்
சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்
மாநில செய்திகள்

சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
28 Jun 2022 8:48 AM IST

சர்வ அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருவர்.

மேலும், அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தை மற்றும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் ஆனி மாதத்தின் சர்வ அமாவாசை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் இன்று புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். தொடர்ந்து சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்