< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
|28 May 2023 12:15 AM IST
ஓரியூரில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தொண்டி,
திருவாடானை தாலுகா ஓரியூர் கோட்டை மகாலிங்க மூர்த்தி கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக விரதம் இருந்த பக்தர்கள் புலியூர் விநாயகர் கோவிலில் இருந்து வேல்காவடி, பால்குடம், பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோட்டை மகாலிங்க மூர்த்தி கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கோட்டை மகாலிங்க மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.