< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கஞ்சிக்கலயம் எடுத்துச்சென்ற பக்தர்கள்
|9 Aug 2022 12:54 AM IST
பக்தர்கள் கஞ்சிக்கலயம் எடுத்துச்சென்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ஓம் சக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் கஞ்சிக்கலயம் மற்றும் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் 700 பேர் கஞ்சிக்கலயமும், 100 பேர் முளைப்பாரியும், 25 பேர் தீச்சட்டியும் எடுத்து வழிபாட்டு மன்றத்திற்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு கஞ்சியினால் சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 82 பேருக்கு ஆடை தானமும், பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.