< Back
மாநில செய்திகள்
கொட்டும் மழையில் தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

கொட்டும் மழையில் தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்

தினத்தந்தி
|
5 May 2023 1:43 AM IST

கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை தோளில் சுமந்து சென்றனர்.

தா.பேட்டை:

தா.பேட்டையில் செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் எடுத்து வருதல், அம்மனை ஊஞ்சலில் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், அங்கம் பிரளுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து செங்குந்தர் மாரியம்மன் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து அம்மனை வழிபட்டனர். அப்போது மேகம் கருத்து திடீரென மழை கொட்ட தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக சுமந்து சென்றனர்.

மேலும் செய்திகள்