< Back
மாநில செய்திகள்
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தினத்தந்தி
|
16 Dec 2022 1:00 AM IST

வீரபத்திரசாமி கோவில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி (எம்.சி.பள்ளி) கிராமத்தில் குருமன்ஸ் பழங்குடி மக்கள் வழிபடும் வீரபத்திரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மைலேரி மல்லேஸ்வர சாமி, வீரபத்திசாமி, நீலகிரி சாமி, சித்தப்ப சாமி கும்பாபிஷேக விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளன்று உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி அழைத்தல், தம்பட எருதின் தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும், பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. வீரகாசி நடன நிகழ்ச்சியுடன், உற்சவ மூர்த்தி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மேகலசின்னம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்