< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தைப்பூசம்: கடவுள் முருகன் கோவில்களில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்...!
|5 Feb 2023 7:42 AM IST
தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூர், பழனி உள்பட கடவுள் முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூர்,
இந்து மதப்பண்டிகைகளில் முக்கியமான நிகழ்ச்சி தைப்பூசம். கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம். அந்த வகையில் இன்று தைப்பூசமாகும். அதேபோல் இன்று பவுர்ணமி தினமாகும்.
தைப்பூசத்தையொட்டி இந்து மதக்கடவுள் முருகன் வழிபாட்டு தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்பட முருகக்கடவுள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் கடலில் புனித நீராடி, மாலை அணிந்து, அலகு குத்தியும், காவடி எடுத்தும், அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.