< Back
மாநில செய்திகள்
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கிரிவலம்
கரூர்
மாநில செய்திகள்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கிரிவலம்

தினத்தந்தி
|
2 July 2023 11:50 PM IST

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு புகழிமலையை சுற்றி கிரிவலப்பாதையில் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமாள், அருள்நிறை சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமாள், புகழிமலை பாலசுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்