< Back
மாநில செய்திகள்
நாகையில் அம்மன் கோவிலில் பாலாபிஷேகத்திற்கு அனுமதி கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள்
மாநில செய்திகள்

நாகையில் அம்மன் கோவிலில் பாலாபிஷேகத்திற்கு அனுமதி கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

தினத்தந்தி
|
11 Sept 2022 8:36 PM IST

5 மணி நேரத்திற்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று பாலாபிஷேகம் நடத்தினர்.

நாகை,

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடத்த முடியாததால், பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தலாம் என கிராம நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இதனால் நாகை மாவட்ட கலெக்டர், முத்துமாரியம்மன் கோவில் நடையை சாத்துவதற்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்று கோவிலுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலவர தடுப்பு வாகனங்களுடன் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்