< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை
|30 July 2023 12:57 AM IST
சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுணர்மிக்காக இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் சதுரகிரி மலைப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. ஆதலால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இன்று நடைபெற உள்ள பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மலைப்பகுதியில் பற்றிய காட்டுத்தீயானது முழுமையாக அணைந்தால் மட்டுமே பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.