< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனி கோவிலுக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே செல்ல பக்தர்களுக்கு அனுமதி
|18 Nov 2023 9:24 AM IST
பழனி மலைக்கோவிலில் உச்சிகால பூஜை நடைபெற்ற பிறகு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திண்டுக்கல்,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை அடிவாரம் கிரிவீதியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட சூரன்களின் உருவங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழனி மலைக்கோவிலில் உச்சிகால பூஜை நடைபெற்ற பிறகு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.