< Back
மாநில செய்திகள்
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர்
மாநில செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

தினத்தந்தி
|
31 July 2023 1:08 AM IST

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் வனப்பகுதியில் தீ பரவியதால் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது காட்டுத்தீ முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால் பவுர்ணமி வழிபாட்டிற்காக இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல இரவில் கோவிலில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக அடிவாரப்பகுதிக்கு இறங்கி விட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்