< Back
மாநில செய்திகள்
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
விருதுநகர்
மாநில செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

தினத்தந்தி
|
25 Oct 2023 1:29 AM IST

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்