< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கடற்கரையில் 5 சவரன் தங்க செயினை தவறவிட்ட பக்தர் - தேடி கண்டுபிடித்த கடல் பாதுகாப்பு குழுவினர்
|23 Jun 2024 6:54 PM IST
திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை கடல் பாதுகாப்பு குழுவினர் தேடி தந்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தனது 5 சவரன் தங்க செயினை தவறவிட்டார். இது தொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு குழுவினரை வரவழைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து தேடிய நிலையில், கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் அந்த செயினை கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பெண்ணிடம் தங்க செயினை திருப்பி கொடுத்தனர். தங்க செயினை கண்டுபிடித்து கொடுத்த குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.