< Back
மாநில செய்திகள்
பாதயாத்திரை வந்த பக்தர், கார் மோதி பலி
திருச்சி
மாநில செய்திகள்

பாதயாத்திரை வந்த பக்தர், கார் மோதி பலி

தினத்தந்தி
|
25 July 2022 1:46 AM IST

பாதயாத்திரை வந்த பக்தர், கார் மோதி உயிரிழந்தார்.

சமயபுரம்:

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(வயது 62). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 30 பக்தர்களும், நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்த பள்ளிவிடை பாலம் அருகே நடந்து வந்தபோது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், சிவசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலனை(45) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்