< Back
மாநில செய்திகள்
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
மாநில செய்திகள்

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

தினத்தந்தி
|
31 March 2024 9:45 PM IST

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை,

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரகுராம்(வயது 60). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மிக ஈடுபாடு கொண்ட இவரும், அவரது அக்கம்பக்கத்தில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து வேன் மூலம் கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவைக்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். உடனே அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த முகாமில் இருந்த டாக்டர்கள், ரகுராமை சோதித்து பார்த்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து ரகுராமின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரே மாதத்தில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேறிய 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்