< Back
தமிழக செய்திகள்
வளர்ச்சி பணிகள் முடக்கம்
விருதுநகர்
தமிழக செய்திகள்

வளர்ச்சி பணிகள் முடக்கம்

தினத்தந்தி
|
23 March 2023 12:54 AM IST

விருதுநகர் யூனியன் 9-வது வார்டு பகுதியில்வார்டு பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


விருதுநகர் யூனியன் 9-வதுவார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சரோஜா மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது முயற்சியில் கூரைக்குண்டு பஞ்சாயத்து சாத்தூர் ரோடு நான்கு வழி சாலை அருகே அமைக்கப்பட்ட புதிய சமுதாயக்கிணறு கடந்த 2022 மார்ச் மாதம் பணி முடிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் அந்த கிணற்றில் எனது வார்டு பகுதியில் உள்ள முத்துராமலிங்க நகர் நிறைவாழ்வு நகர்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி சமுதாய கிணறு தற்போதுள்ள கோடைகால குடிநீர் தேவைக்கு வினியோகம் செய்ய முடியாத நிலையில் காட்சி பொருளாக அமைந்துள்ளது. மேலும் பஞ்சாயத்து யூனியன் பொது நிதியிலிருந்து பாலம்மாள் நகர் பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பணி முடித்தும் மாவட்ட ஊராட்சியால் ரூ. 4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணி நடைபெறாமல் முடங்கி உள்ளது. எனது வார்டு பகுதியில் உள்ள முத்துராமலிங்க நகர், பாலம்மாள் நகர் பகுதியில் கூரைக்குண்டு கிராம பஞ்சாயத்து பகுதிகளாக உள்ள நிலையில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. எனது வார்டு வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே மேற்படி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்