< Back
மாநில செய்திகள்
விருதுநகர் யூனியன் பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகர் யூனியன் பகுதிகளில் வளர்ச்சி பணிகள்

தினத்தந்தி
|
14 Oct 2023 1:38 AM IST

விருதுநகர் யூனியன் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர், கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விருதுநகர் யூனியன் இனாம்ரெட்டியபட்டி அரசு பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் ஆனந்தகுமார், கலெக்டர் ஜெகசீலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அவர்கள் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சீருடை தரம் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் இனாம்ரெட்டியபட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு பொருட்கள், குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ப எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தனர்.


இனாம்ரெட்டியபட்டி பஞ்சாயத்தில் ஜல்ஜீவன் மற்றும் 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் வீடு தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தனர்.ஒண்டிப்புலி நாயக்கனூர் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 420 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து கன்னிசேரி புதூர் பஞ்சாயத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பிரசவம் மற்றும் பிரசவத்திற்கு பின் வழங்கப்படும் சிகிச்சை சித்த மருத்துவப்பிரிவு மருந்து இருப்பு மற்றும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளியிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருத்துவம் மற்றும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தனர். தம்ம நாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முருங்கை மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் டாக்டர் தண்டபாணி மற்றும் அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்