
விருதுநகர்
ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் பல லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள பூச்சான் காலனி மயானத்தில் ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் செலவில் காத்திருப்பு கொட்டகை கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் செலவில் புதிய தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அண்ணாமலைரெட்டியார் தெருவில் ரூ.9 லட்சம் செலவில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வநத்தம் புதூரில் ரூ.16 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு வருகிறது. மேலும் அதே பகுதியில் ரூ.16 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவற்றை பஞ்சாயத்து தலைவர் சக்திவேல்நாகராஜ், துணைத்தலைவர் நாகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பஞ்சாயத்து செயலர் செல்வம் உடனிருந்தார்.