< Back
தமிழக செய்திகள்
சாத்தூரில் வளர்ச்சி பணிகள்
விருதுநகர்
தமிழக செய்திகள்

சாத்தூரில் வளர்ச்சி பணிகள்

தினத்தந்தி
|
17 Feb 2023 1:35 AM IST

சாத்தூரில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

சாத்தூர்,

சாத்தூர் சிதம்பரம் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

மேலக்காந்தி நகர் பகுதியில் நுண் உரமாக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் மரக்கன்றும் நட்டு வைத்தார். ஆய்வின்போது திட்ட இயக்குனர் திலகவதி, கோட்டாட்சியர் அனிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் இளவரசன் ஆகியோர் உடனிருந்தனர். சாத்தூர் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு வெளி நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இணை இயக்குனர் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மருத்துவ அலுவலர் முத்துச்செல்வம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்