< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள்
|10 April 2023 12:30 AM IST
கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
தகட்டூர் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வுசெய்தார். அப்போது பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் ரூ.49 லட்சத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, ஊராட்சி செயலாளர் அன்புராஜ் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
இதேபோல் ஆயக்காரன்புலம்-4 ஊராட்சி திம்மநாயக்கன்குத்தகை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் குளத்தில் ரூ.8.95 லட்சம் மதிப்பீட்டிலும், தகட்டூர் ஊராட்சி சுப்பிரமணியன்காடு கிராமத்தில் உள்ள வெட்டு குளத்தில் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைப்பு, சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.