< Back
மாநில செய்திகள்
காரியாபட்டி ஊருணியில் மேம்பாட்டு பணி
விருதுநகர்
மாநில செய்திகள்

காரியாபட்டி ஊருணியில் மேம்பாட்டு பணி

தினத்தந்தி
|
8 May 2023 12:29 AM IST

காரியாபட்டி ஊருணியில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது.

காரியாபட்டி,

காரியாபட்டி பேரூராட்சியை தமிழக அரசு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தியுள்ளது. மேலும் காரியாபட்டி பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன பஸ் நிலையமாக மாற்ற ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பஸ் நிலையத்தை எவ்வாறு விரிவாக்கம் செய்வது என்பது குறித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார், இளநிலை பொறியாளர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் காரியாபட்டி செவல்பட்டி மயானம் அருகே உள்ள ஊருணியை ரூ.20 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு, ஊருணி கரையில் கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும் பேரூராட்சித்தலைவர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்