< Back
மாநில செய்திகள்
சென்னை பூங்காக்களில் மேம்பாட்டு பணி - மாநகராட்சி
சென்னை
மாநில செய்திகள்

சென்னை பூங்காக்களில் மேம்பாட்டு பணி - மாநகராட்சி

தினத்தந்தி
|
14 April 2023 10:14 AM IST

சென்னை பூங்காக்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மைய தடுப்புகள், 113 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன. இந்த 786 பூங்காக்களில் ஒப்பந்த முறையில் 584 பூங்காக்களும், மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக 145 பூங்காக்களும், பொதுமக்கள் தத்தெடுப்பு முறையில் 57 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடுதல், புல்வெளிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூங்காவிலும் 50 முதல் 100 எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், அனைத்து மரங்களிலும், சுவர்களிலும் பச்சை, மஞ்சள் நிறங்களில் வர்ணம் பூசுதல், பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குறைபாடுகள் சரிசெய்தல் மற்றும் உயர்தரத்தில் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூங்காக்களில் பொதுமக்கள் அமரும் இருக்கைகளை சீரமைத்தல் மற்றும் வர்ணம் பூசுதல், கூடுதலாக தேவைப்படும் அளவுக்கு பொதுமக்கள் உட்காருவதற்கான இருக்கைகள் அமைத்தல், நடைபயிற்சி பாதைகள் தேவைப்படும் இடங்களில் அமைத்தல், ஏற்கனவே உள்ள நடைபாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு சீரமைத்தல் மற்றும் வர்ணம் பூசுதல், மின்விளக்குகளை சரிசெய்து பூங்காவில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒளிரச்செய்தல், பூங்காவின் நுழைவாயிலில் அழகிய நிறத்தில் வர்ணம் பூசுதல், பூங்காக்களில் உள்ள செயற்கை நீரூற்று மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை செயல்படும் வகையில் புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்