< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ;    அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல்
ஈரோடு
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ; அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
9 Sept 2023 3:01 AM IST

வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கண்காணிப்பு குழு கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு குழு தலைவர் கணேசமூர்த்தி எம்.பி. தலைமை தாங்கினார். தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 28 திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அது தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு வரப்பெற்றுள்ள மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி அதில் காலதாமதம் ஏற்படாத வகையில், பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆய்வு

மேலும் ஊரக வளர்ச்சித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை, சமூக நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை, கனிம வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிவாரண நிதி

முன்னதாக ஈரோடு பி.பி.அக்ரஹாரம் தர்கா வீதியில் கடந்த 2-ந்தேதி பெய்த பலத்த மழையால் வீட்டின் மேல்தளம் இடிந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சத்திற்கு வங்கியில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆணையை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்