கள்ளக்குறிச்சி
வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
|வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு சாதாரண கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் முரளிதரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகளை விண்ணப்பம் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.