< Back
மாநில செய்திகள்
ரூ.92 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ரூ.92 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

தினத்தந்தி
|
18 March 2023 12:30 AM IST

நிலக்கோட்டையில் ரூ.92 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிலக்கோட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சத்து 63 ஆயிரத்தில் புதிய தார்சாலை அமைப்பது, தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் மீனாட்சிபுரத்தில் ரூ.43 லட்சத்து 25 ஆயிரத்தில் வளம் மீட்பு பூங்காவுக்கு மேற்கூரை அமைத்தல், பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள், பேரூராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்