< Back
மாநில செய்திகள்
ரூ.90 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ரூ.90 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

தினத்தந்தி
|
14 Jun 2023 2:29 AM IST

நரியனூர், மணப்படுகை, தளவாய்பாளையம் கிராமங்களில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் சண்முகம் எம்.பி. ஆய்வு செய்தார்.

மெலட்டூர்:

அம்மாப்பேட்டை ஒன்றியம், இடையிருப்பு ஊராட்சி மணப்படுகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, நரியனூரில் ரூ.20 லட்சத்தில் தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, கத்திரிநத்தம் ஊராட்சி தளவாய்பாளையம், அருந்தவபுரத்தில் ரூ.50 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை கட்டிடம் உள்பட ரூ.90 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை எம்.சண்முகம் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. இந்த ஆய்வின் போது அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி.அய்யாராசு, ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, இடையிறுப்பு ஊராட்சிமன்ற தலைவர் வனிதாகார்த்திகேயன், ஒப்பந்ததாரர் சண்.சரவணன், ஊராட்சி செயலாளர்கள் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்