< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள்
திருவாரூர்
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள்

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குட்டப்பட்ட குளிக்கரை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவ அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அம்மையப்பனில் உள்ள துணை சுகாதார நிலையத்தினையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து கொரடாச்சேரி பேரூராட்சி பகுதியில் சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தினையும், கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தினையும், அபிவிருத்தீஸ்வரம், செல்லூர் பகுதிகளில் சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

அங்கன்வாடி மையம்

பின்னர் வடகண்டம் பகுதியில் அமைக்கப்பட உள்ள சுகாதார நிலையத்திற்கான இடத்தினையும், அகரதிருநல்லூர் பகுதியில் அங்கன்வாடி மையம் மேம்படுத்தப்பட உள்ள இடம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், செயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்