நாகப்பட்டினம்
வளர்ச்சி திட்ட பணிகள்
|திருமருகல் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம், விற்குடி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம் கட்டுமான பணிகளையும், பில்லாளி வாய்க்கால் தூர்வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.