< Back
மாநில செய்திகள்
அரகண்டநல்லூாில்ரூ.1¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்பேரூராட்சி மன்ற தலைவர் ஆய்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அரகண்டநல்லூாில்ரூ.1¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்பேரூராட்சி மன்ற தலைவர் ஆய்வு

தினத்தந்தி
|
14 March 2023 12:15 AM IST

அரகண்டநல்லூாில் ரூ.1¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்தாா்.


திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரிந்துரையின் பெயரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் கழிவு நீர் வாய்க்கால் கட்டும் பணி, இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்தில் குடிநீர் குழாய் விரிவாக்கம் பணி, அம்ருத்து 2.0 திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி, ரூ.47 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணி உள்ளிட்ட மொத்தம் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, செயல் அலுவலர் அருள்குமார், பேரூராட்சிகளின் இளநிலை பொறியாளர் ராமசாமி, துணை தலைவர் கஜிதாபீவி, தலைமை எழுத்தர் சுதாகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் வேம்புஆறுமுகம், ஏ.வி.ஆர்.குமார், அனிதாமோகனகிருஷ்ணன், ஜெரினாபேகம் அகமதுஷரீப் உள்பட பலர் உடனிருந்தனர். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு அறிவுரை வழங்கினார்.

மேலும் செய்திகள்