< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும்

தினத்தந்தி
|
6 Jun 2022 10:15 PM IST

வளர்ச்சி திட்டப்பணிகளை மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கவுதமசிகாமணி எம்.பி. பேசினார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கண்காணிப்புகுழு தலைவர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கட்டத்தில் கவுதமசிகாமணி எம்.பி. கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் நோக்கம் என்பது மத்திய, மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்பதே ஆகும். இக்குழுவானது அனைத்து திட்டப் பணிகளும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதை உறுதி செய்தல், திட்ட செயல்பாடுகளின் இடர்பாடுகளை களைய ஒருங்கிணைந்த வழிகளை அறிதல், மாவட்ட திட்டக்குழுவின் முன்னுரிமை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுதல், முன்னுரிமை பணிகளுக்கு இடம் மற்றும் நில வசதிகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், தேசிய திட்டங்கள் குறித்து மாவட்ட திட்ட குழுவிற்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட நோக்கங்களை கொண்டு செயல்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் குறைகள் இருப்பின் அது குறித்து அலுவலர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி) மணி, திட்ட இயக்குனர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தேவநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்