< Back
மாநில செய்திகள்
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: தவெக தலைவர் விஜய்
மாநில செய்திகள்

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: தவெக தலைவர் விஜய்

தினத்தந்தி
|
1 May 2024 9:20 AM IST

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மே 1 (இன்று) உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனத்தில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்