கள்ளக்குறிச்சி
வளர்ச்சி, கண்காணிப்புக்குழு கூட்டம்
|கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி, கண்காணிப்புக்குழு கூட்டம் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. பேசுகையில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக அரசு ஊழியர்கள் செயல்படுகிறார்கள். எனவே அந்தந்த திட்ட அலுவலர்கள் அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.