< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம்

தினத்தந்தி
|
22 Feb 2023 11:36 PM IST

வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதன் தலைவரும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.யுமான பாரிவேந்தர் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தீன தயாள் அந்தோதயா யோஜனா, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் குறித்தும், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் துறை அலுவலர்களுடனான ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பாரிவேந்தர் எம்.பி. பெரம்பலூர் நகராட்சி 11-வது வார்டில் எம்.பி. வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் எம்.பி. நிதியில் இருந்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மூலம் மற்ற மாவட்ட கலெக்டர்களை வேகப்படுத்தி, அதற்கான அனுமதி பெற்று திட்டங்களை முடித்து கொடுக்க கேட்டு இருக்கிறேன். என்னுடைய எம்.பி. நிதியை தொகுதியில் திட்டங்களுக்கு முழுமையாக செலவழிக்க வேண்டும். இதுவரைக்கு பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி பாதி திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதை தடுக்க வேண்டும். இதில் ஈடுபடுவோர்கள் மீது சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்