< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
தேனி
மாநில செய்திகள்

வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
10 Nov 2022 12:30 AM IST

தேனியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.

தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதற்கு தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், திட்டப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். வளர்ச்சித் திட்டப் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டப் பணிகளின் பலன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்