< Back
மாநில செய்திகள்
தேவர் ஜெயந்தி விழா: அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா: அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

தினத்தந்தி
|
26 Oct 2022 7:55 PM IST

தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில், தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் கூறுகையில்,

தேவர் ஜெயந்தி விழாவின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும், மேலும் வாகங்களும் பறிமுதல் செய்யப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்