< Back
மாநில செய்திகள்
எட்டயபுரத்தில் தேவர் படம் அவமதிப்பு:3 பேர் அதிரடி கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

எட்டயபுரத்தில் தேவர் படம் அவமதிப்பு:3 பேர் அதிரடி கைது

தினத்தந்தி
|
12 July 2023 6:45 PM GMT

எட்டயபுரத்தில் தேவர் படம் அவமதிப்பு தொடர்பாக 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

எட்டயபுரம்:

எட்டயபுரம் மேலவாசல் தூத்துக்குடி- கோவில்பட்டி செல்லும் சாலையில் உள்ள தேவர் படத்தை நேற்று முன்தினம் மாலையில் 3 மர்ம நபர்கள் குடிபோதையில் அவமதிப்பு செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த 3 பேரையும் கைது ெசய்து நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி- கோவில்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமத மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டம் நீடித்தது. பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவர் படத்தை அவமதித்த எப்போதும்வென்றான் முத்து நகர் சித்திரை குமார் மகன் கனகராஜ்(வயது 25), அதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் ராஜா மகன் சத்தியமூர்த்தி(26), விளாத்திகுளம் காமராஜர் நகர் முனியசாமி மகன் ராஜசேகர்( 32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்