< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தேவதானம் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி
|30 Aug 2022 3:07 AM IST
தேவதானம் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி தொடங்கியது.
ராஜபாளையம்.
ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணியை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து தேவதானத்தில் நடைபெற்ற விழாவில் உதவி ஆணையர் வான்மதி, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் கலாராணி, தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ் கோடி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் ஏசம்மாள், அரிராம்சேட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தெப்பம் சீரமைக்க நடவடிக்கை எடுத்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.