சிவகங்கை
பிரான்மலை உச்சிக்கு பொங்கல் வைக்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்
|பிரான்மலை உச்சிக்கு பொங்கல் வைக்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை உச்சியில் முருகன், விநாயகர் கோவில்கள் உள்ளன. அதேபோல் முஸ்லிம் தர்காவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தைப்பூசத்தன்று மலையில் உள்ள வேல் கொண்ட முருகபெருமானுக்கு பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தினர் பொங்கல் வைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு போலீசார் தடை விதித்து அவர்களை தடுத்து வருகின்றனர். இந்நிலையில் பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ் தேசம் மக்கள் கட்சி, நாம் தமிழர், தமிழ் மக்கள் மன்றம், மே 17 இயக்கம், தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியோருடன் இணைந்து மலை உச்சிக்கு பொங்கல் வைக்க முயன்றனர். அவர்களை பிரான்மலை பஸ் நிலையம் அருகில் தடுத்து நிறுத்தி தாசில்தார் சாந்தி, துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.