< Back
மாநில செய்திகள்
கோர்ட்டில் சாட்சி சொல்ல பணம் கேட்ட துப்பறியும் நிறுவனம் - கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
மாநில செய்திகள்

கோர்ட்டில் சாட்சி சொல்ல பணம் கேட்ட துப்பறியும் நிறுவனம் - கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
9 Jun 2023 5:27 PM GMT

கோர்ட்டில் சாட்சி சொல்ல மறுத்த தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கு செங்கல்பட்டு நுகர்வோர் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

செங்கல்பட்டு,

கோர்ட்டில் சாட்சி சொல்ல மறுத்த தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கு செங்கல்பட்டு நுகர்வோர் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் நந்தகுமார் என்பவர், செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் சென்னையில் உள்ள தனியார் துப்பறியும் நிறுவனத்தை சொந்த பிரச்சனை தொடர்பாக நாடியதாகவும், அவர்கள் வழங்கிய ஆதாரங்களை கொண்டு, ஆலந்தூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வழக்கில் சாட்சி சொல்ல துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர், ரூ.2 லட்சம் பணம் கேட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீராம் நந்தகுமாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க, துப்பறியும் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

அதேசமயம் துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் சாட்சியளிப்பதற்கான செலவினங்களை, ஸ்ரீராம் நந்தகுமாரே ஏற்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்